கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி அருகே கோகுலம் என்ற பெயரில் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உடனடியாக 9 பேர் கொண்ட காவல்துறையினர் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.


சோதனையில் லாட்ஜில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் இந்த பாலியல் தொழில் கும்பலின் முக்கிய குற்றவாளி கேரளாவின் அட்டுக்கல்லைச் சேர்ந்த 58 வயதான ஜலஜா என்று தெரியவந்தது.  ஜலஜாவும், குடப்பனகுன்னுவைச் சேர்ந்த 38 வயதான மனு இருவரும் இணைந்து இந்த வேலையில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.




போலீசார் லாட்ஜை சோதனை செய்ய சென்றபோது, லாட்ஜ் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. போலீசார் வருவதைக் கண்ட ஜலஜா பயத்தில் உள்ளே சென்று பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர், போலீசாரை கண்ட பயத்திலே லாட்ஜைின் கதவுகளை திறந்து, லாட்ஜை நடத்திக் கொண்டிருப்பது நான்தான் என்று கூறியுள்ளார். பின்னரே, போலீசார் லாட்ஜில் இருந்தவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சோதனையின்போது, ரூபாய் 3.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டத. ஆறு  பெண்கள் அணிந்திருந்த நகைகளும் மீட்கப்பட்டது.


போலீசார் நடத்திய விசாரணையில் விபச்சார தொழிலுக்கு அசாமைச் சேர்ந்த இரண்டு பேர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 32 வயதான மனகார் மஜூம்தர், 28 வயதான பியூட்டி தாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.




இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 6 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மருத்துவ கல்லூரி அருகே இதுபோன்று பாலியல் தொழில் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : இரண்டு மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிக்கொன்ற குரங்குகள்.. இது என்ன குரங்கு அட்டகாச மாதமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண