குளித்தலை அருகே பள்ளி மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொசூர் கம்பளியம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்ற வினோத்குமார், மற்றும் இனுங்கூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஆகிய இருவரும் டாட்டா ஏசி வண்டியில் வெங்காயம் விற்பனை செய்து வந்தனர்.




இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து விட்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு சக பள்ளி மாணவிகளுடன் மாணவி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் ஆர்கானிக் பண்ணை அருகே வந்தபோது, இவர்கள் மாணவிகளின் வாகனத்தை நிறுத்தி தலைமுடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் தொந்தரவு செய்ததோடு இதை வெளியே சொன்னால் வண்டியை விட்டு ஏற்றி கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.


 




இதையடுத்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வினோத்குமார் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரையும் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் ரூபிணி இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.