கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் ஓசியில் மதுபானம் கேட்டு பீர் பாட்டிலை உடைத்து தகராறு செய்த இரண்டு பேரை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவக்குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பழைய ஜெயங்கொட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது அங்கு வந்த குப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மனோகரன் ஆகிய இருவரும் பணம் கொடுக்காமல் ஓசியில் மதுபானம் வேண்டுமென்று கேட்டு உள்ளனர். அதற்கு சூப்பர்வைசர் தர முடியாது என்று கூறியதற்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து பீர் பாட்டிலை கடையின் முன்பு உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்த வீடியோவை டாஸ்மாக் சூப்பர்வைசர் ரகசியமாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து டாஸ்மார்க் சூப்பர்வைசர் பாலகிருஷ்ணன் மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் இன்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்