பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கில் கைதான காவலர்..

இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது.

Continues below advertisement


கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: இந்த காலத்தில் இப்படி பட்ட பிள்ளைகளா..!! பெற்றோர்களுக்கு பாத பூஜை! ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய மாணவர்கள்...!


இதையும் படிங்க: Madurai Metro ; மெட்ரோ ரயில் மேலூரைத் தாண்டுமா.. மதுரை மக்களின் எதிர்பார்ப்பு இது தான் !

அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர்  இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola