கரூரில் வீட்டின் முன்பு இளைஞர்கள் மது அருந்துவதை தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (வயது 45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது தாயுடன் இருந்த போது, வீட்டின் முன்பக்கத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
தனது வீட்டு முன்பு மது அருந்துவதை தட்டிக் கேட்டுள்ளார். இதில் கோபடைந்த இளைஞர்கள் சமையல் கலைஞர் வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து சரவணனின் தலை, கை, முகங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில், அங்கு வந்த கரூர் நகர போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு, தப்பியோடிய நபர்களை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்