கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகம், கொங்கு மெஸ் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு வருமான வரி சோதனை நடத்தி வருகிறது.
கரூரில் 3-வது கட்டமாக இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இடங்களில் வருமானவரி சோதனை தொடங்கி நடைபெறுகிறது.
சோதனையானது ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீடு, அவரது பண்ணைவீடு, கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள ராமவிலாஸ் வீவிங் ஃபேக்டரி, நிதி நிறுவனங்கள் மற்றும் மாயனூர் பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் பண்ணை வீடு என 8 இடங்களில் தொடங்கி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் முதல் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகம், கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் உணவகம் என 2 இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு, மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்