கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது, கை மற்றும் வயிற்றுப் பகுதிகள் என 3 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும், உடலை கிழித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாநகரையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல ஆயிரம் நபர்களுக்கு மேல் பயணிக்கும் முக்கிய சாலையில், அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவர், அனைவரின் முன்பு தான் வைத்திருந்த கத்தியால் உடலை ஆங்காங்கே கத்தியால் குத்திவிட்டு, பின், அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய சம்பவமும், பாதிக்கப்பட்டு கத்தியால் குத்து வாங்கிய நபரின் மனைவி, அவருடைய கணவரை காக்க, மக்களிடம் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கய்யா என்றும் கூச்சலிட்டும், கத்தியால் கிழிக்கப்பட்ட இடங்களை அவர் வைத்திருந்த
துண்டினை வைத்து ரத்தத்தை அடைத்த காட்சி அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்த பிறகு விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பட்டாக்காத்தி கலாச்சாரமும், கத்தி கலாச்சாரமும் இருந்த போது அப்போது இருந்த மாவட்ட எஸ்.பி மற்றும் காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பு ரோந்துகளில் ஈடுபட்டு குற்றங்களை கட்டுப்படுத்திய நிலையில் தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா குற்றங்கள் தடுக்க குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தினையடுத்து ரோந்து காவலர் ஒருவர் அப்பகுதியில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றார்.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் பயமின்றி பயணம் செய்ய தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.