கரூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி விஜயா, அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி ராதிகா. கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு ஒரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சிவசுப்பிரமணியத்திற்கும் விஜயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் விஜயாவை வெட்டியுள்ளார்.


 




அப்போது அங்கு வந்த சிவசுப்பிரமணியனின் மனைவி ராதிகா அவரது சித்தி தமிழ்செல்வி ஆகியோர் சேர்ந்து விஜயாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவரை  அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் சிவசுப்பிரமணியன், அவரது மனைவி ராதிகா, தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வேலாயுதம் பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.


 




 


ராதிகா அளித்துள்ள புகாரின் வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அம்மிக்கல்லை தனது வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலைமுடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளைம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் வேலாயுதம் பாளையம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.