கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருபவர்களை அலுவலகத்தின் பல்வேறு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்களைக் கொண்டு வருகிறார்கள் என்று சோதித்து தான் உள்ளே அனுப்புகின்றனர்.


கடந்த வாரம் ஒருவர் அனைத்து பாதுகாப்பையும் கடந்து மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றிக் கொண்டு கலெக்டர் குறைதீர் மையம் அருகே அருகில் தீக்குளிக்க முயன்றார். அது போல் இந்த வாரம் ஏதாவது நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அனைத்து வாயில்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 




இருந்த போதிலும் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த ஒரு பெண், திடீரென்று தன் உடலில் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்துக்கொள்ள போலீசாரும், தீயணைப்பு படையினரும் அப்பெண்ணை அழைத்துச் சென்று அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.




தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள், பெண் குறித்து விசாரித்த போது அவர் குளித்தலை கருங்கல்பட்டி குடித்தெருவில் வசிக்கும் செல்வம் மனைவி சாந்தி என்பதும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், சாந்தி பயன்படுத்தி வந்த பொதுபாதையை அடைத்து வைத்திருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக தான் பெரிய அளவில் மன உளைச்சலில் இருப்பதாகவும், இது குறித்து பத்து முறைக்கு மேல் மனு அளித்தும் ஒன்றும் நடக்காததால் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தீக்குளிக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.



தொடர்ந்து அவர் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். சாந்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண் முன்னே பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண