கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள அய்யம்பாளையம் பிரிவு அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), மற்றும் இவரது தாத்தா பொன்னுச்சாமி (72) ஆகிய இருவரும் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சுநாயக்கன்பட்டிக்கு கோழி சந்தையில், கோழி வாங்க பைக்கில் சென்றனர்.
அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் பைக்கை வழிமறித்து, அவர்களிடமிருந்து ரூ.14 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கரூர் டிஎஸ்பி தேவராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கடந்த 7ம் தேதி போலீசார் வெள்ளியணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியின் வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, காரில் வந்த கரூரை சேர்ந்த துரைப்பாண்டி, மணிகண்டன், பரத், முகேஷ், முருகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோழி வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,000 மற்றும் கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பாராட்டினார்.
வேலாயுதம்பாளையம் அருகே 304 கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர் கைது
கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், பெரியசாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் புன்னம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முருகன் என்பவரது கடையில் ஏராளமான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து முருகன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலம், புதூர் ரோடு பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது 42) என்பவர் காரில் கொண்டு வந்து புகையிலை பொருட்களை கொடுத்துச் சென்றதாக கூறினார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட குழுவினர் ஆத்தூர் தான பரப்பு நெடுஞ்சாலையில் உள்ள மூர்த்தி பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை நடத்தியதில் அந்த காருக்குள் இருந்த சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோவுக்கு மேல் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்