கரூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பாக  2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சமூகநல அலுவலர் பூரணம், கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.




இந்த சிறுமியை கரூர் ராமாகவுண்டனூரைச் சேர்ந்த டிரைவர் மயில்ராஜ் (வயது 23) நல்லாம்பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மயில்ராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவல் வைக்கப்பட்டார். 




கரூர் மாவட்டம் கடவூர் சமூகநல அலுவலர் மாரியம்மாள் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கடவூர் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். அவரை குளக்காரன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் (வயது 25) கடத்திச் சென்று குளக்காரன்பட்டி மாரியம்மன் கோவிலில் சம்பவத்தன்று திருமணம் செய்து, பலமுறை உறவு வைத்துக்கொண்டதாக புகாரில் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார். கார்த்திக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.




தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு - தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.


 கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருடப்பட்டுள்ளது. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கரூர் அருகே உள்ள வடக்கு காந்த கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரெங்கன் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும், வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், தங்க சங்கிலி, மூக்குத்தி உள்ளிட்ட 4 3/4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து ரங்கன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கரூர் மாநகரப் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப் படுத்தி திருட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண