அடப்பாவிகளா! காயத்திற்கு பெவிகால் போட்ட நர்ஸ்! சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்
கன்னத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு பெவிகால் தடவி செவிலியர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது ஹவேரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தாலுகாவில் ஆடுரு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோதி என்ற செவிலியர் ஒருவர் பணியாற்றி வந்தார்.
பெவிகால் சிகிச்சை:
இந்த பகுதியில் பெற்றோர்களுடன் வசித்து வருபவர் குருகிஷன் அன்னப்பா ஹோசமணி என்ற 7 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த 14ம் தேதி இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவனை அருகில் இருந்த ஆடுரு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது பணியில் செவிலியர் ஜோதி இருந்தார். அவர் காயம்பட்ட சிறுவனுக்கு மருந்திற்கு பதிலாக பெவிகால் ( பசை) தடவி அதன் மேல் பேண்ட் எய்ட் ஒட்டியுள்ளார். இதன்பின்னர், சிறுவன் வீட்டிற்குச் சென்றபோது அவனது பெற்றோர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அலட்சிய பதில்:
பின்னர், அவரது வீட்டிற்கு அந்த சிறுவனின் பெற்றோர்கள் சென்று கேள்வி எழுப்பினர். அப்போது, செவிலியர் ஜோதி தனக்குத் தெரிந்ததை வைத்துதான் சிகிச்சை அளித்ததாகவும், தான் எப்போதும் இப்படித்தான் சிகிச்சை அளிப்பதாகவும் பதில் அளித்துள்ளார். இதைக்கேட்ட சிறுவனின் பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நடந்த அனைத்தையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை சுகாதாரத்துறையினருக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஜோதி தற்போது கட்டல் சுகாதார மையத்திற்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு மருந்திற்கு பதிலாக பெவிகுவிக் வைத்து சிகிச்சை அளித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அந்த சுகாதார பணியாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து கர்நாடகாவில் இதன்பின்பு இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.