Crime : கோழிக்கறியை சாப்பிடாமல் வம்புசெய்ததால் ஆத்திரம்.. பெற்ற மகனை அடித்துக்கொன்ற தந்தை

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில், வீட்டில் செய்த கோழிக் கறியை ருசிக்காததால், தனது மகனைக் கொன்ற ஒரு விநோதமான சம்பவத்தை குறித்து புதன்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

Continues below advertisement

கர்நாடகாவின் தட்சிணகன்னடா மாவட்டத்தில், வீட்டில் செய்த கோழிக் கறியை ருசிக்காததால், தனது மகனைக் கொன்ற ஒரு வினோதமான சம்பவத்தை குறித்து புதன்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

Continues below advertisement

வீட்டில் செய்த உணவை உண்ணாமல் தகராறு செய்ததற்காக ஆத்திரமடைந்த தந்தை மரத்தடியால் தாக்கியதால் 32 வயதான அவரது மகன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் உள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்துள்ளது.

பலியானவர் சிவராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வீட்டில் கோழி கறியை சாப்பிடுவது தொடர்பாக அவரது தந்தை ஷீனாவுடன் ஏற்பட்ட வாய் தகராறில் கொல்லப்பட்டார்.

சிவராமின் தந்தை, தான் வீடு திரும்புவதற்குள் வீட்டில் தயாரிக்கப்பட்ட கோழிக் கறியை சாப்பிட்டதால் இச்சண்டை தொடங்கியது என வட்டாரங்கள் தெரிவித்தன. மகன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரத்தில் சிவராமை மரத்தடியால் தந்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சுப்ரமணியம் , குற்றவாளியை கைது செய்தார். இறந்தவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola