கர்நாடகாவில் பெண்களை கேலி செய்ததாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கெரூர் பகுதியில் நேற்றைய தினம் இருவேறு சமூகத்தினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அருண் மற்றும் லட்சுமணன் என்ற இரு சகோதர்கள் தங்கள் சகோதரியை கேலி செய்ததாக கூறப்படும்  உள்ளூர் நபரான யாசினை சந்தித்து கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு கடைசியில் கைகலப்பாக மாறியது. 






இதனால் ஆத்திரமடைந்த யாசின் தனது நண்பர்களுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அதன்பேரில் சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து அருண் மற்றும் லட்சுமணனை தாக்கியுள்ளனர்.இதனையடுத்து அருண் மற்றும் லட்சுமணன்  நண்பர்களும் அங்கு வர இரு கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்  இதனை பிரிவினை வாத கலவரமாக மாற்ற சிலர் முயன்றதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக கெரூர் மார்க்கெட் பகுதியில் மர்மநபர்கள் புகுந்து தள்ளு வண்டிகளுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் அங்கு நிறுத்தப்பட வாகனத்திற்கும் தீ வைத்தனர். 


வன்முறை சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த  18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 3 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கெரூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஜூலை 8 ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த மோதலில் இந்து ஜாகரன வேதிகே உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண