பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்வர் (வயது 62). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு கொண்டே அங்கு தங்கி வந்தார்.
இரும்பு கட்டுமான பணியின்போது அவருக்கு மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். ஊத்துக்காடு மற்றும் கிதிரிப்பேட்டை ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள சுடுகாட்டிலும் பிணத்தை புதைக்க அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. வாலாஜாபாத் காவல்துறையினர் இரண்டு ஊராட்சிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சடலத்தை புதைக்க வேண்டுகோள் விடுத்தும், அப்பகுதி மக்கள் மறுத்துள்ளனர்.
பின்னர் புஸ்வர் சடலத்தை நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய்க்கு அருகே, ஜேசிபி வைத்து 10 அடி பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்துள்ளனர்.
அந்தப் பகுதியில் ஆடு மாடுகள் மேய்க்க சென்ற நபர்களுக்கு ஏரியில் பிணம் புதைக்கப்பட்டுள்ள தகவல் தெரிந்து நெய்க்குப்பம் கிராமத்தில் பரவியதால் அந்த கிராமத்து மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. அங்க புதைக்கப்பட்டிருக்கும் பிணத்தால் ஏதாவது ஊருக்கு பிரச்சனையை ஏற்படும் என்பதால், உடலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து கொண்டு கேட்ட பொழுது, இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்