காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கரும்பாக்கம், சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, பழவேரி, திருவானைக்கோவில், தண்டரை, மாம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.



 

இந்த வங்கியில் இரவு காவலராக கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்பேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், இரவு காவலர் காவலுக்கு இருந்துள்ளார். இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காவலரின் பலமாக தாக்கி வங்கி பாத்ரூமில், கட்டி போட்டு வைத்துவிட்டு  வங்கியில், பின் பக்கம் இருந்த ஜன்னலை உடைக்க முற்பட்டுள்ளனர்.



 

ஜன்னல் கம்பிகள் வலுவாக இருந்ததால், உடைக்க முடியாமல் திரும்பி சென்றனர். அதிகாலை பாத்ரூமில் முணுமுணு சத்தம் கேட்ட பிறகு பொதுமக்கள் காவலாளியை மீட்டு சாலவாக்கம் போலீசாருக்கு, தகவல் அளித்தனர். தகவல் பேரில் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் இருந்த மூன்று சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை காவல்துறையினர், தற்பொழுது தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



 

இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, அதிகாலை 2 மணி அளவில் காவலாளி காவல் காத்துக்கொண்டிருந்த பொழுது எதிர்பார்த்த விதமாக மூன்று பேர் காவலாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். காவலாளியை அடித்து உதைத்து, கையில் கொண்டு வந்த நைலான் கயிறால் கட்டி உள்ளனர். இதனை அடுத்து காவலாளி முணுமுணுத்த பொழுது அவர் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். இதனை அடுத்து காவலாளியை அங்கு இருந்த கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, மர்மமாக நபர்கள் மூன்று பேரும் ஜன்னலை உடைத்து அதன் வழியாக நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சித்ததாக தெரிகிறது. இதுகுறித்து தடவியல் துறைவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, தடவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.




 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண