காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சி, ஶ்ரீ பெரும்புதூர்,உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 19ந் தேதியன்று நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளிலும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டு, மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியிள் 18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 51 வார்டுகளில்1, 12, 35, 49 ஆகிய 4 வார்டுகளிலும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 1 வார்டிலும் திமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு பட்டியல் வழங்கியது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி வழங்கிய பட்டியலில் இல்லாத 23வது வார்டு மட்டும் வழங்குவதாகவும், மற்றபடி வேறு எங்கும் வாய்ப்பில்லை, பிறகு பேசி சொல்கிறோம் என்று மாவட்ட திமுக தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது திமுக அறிவித்திருக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் படி, காங்கிரசுக்கு 4 இடமும் விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஆகியோருக்கு தலா ஒரு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை . காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பரவலான தொடர்புகள் செல்வாக்கு உள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மாநகராட்சியில் ஒரு இடம் கூட ஒதுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வருத்தத்தில் இருந்தனர். இதுபோன்ற தொகுதி உடன்பாடுகளில் தோழமை கட்சிகள் எடுக்கும் நிலைபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒருபோதும் நட்டமில்லை என அக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவசர கூட்டம்
இன்று பிற்பகல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. படிக்கட்டில் மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட நிர்வாகி நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தனித்து போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1. வது வார்டு வேட்பாளராக R.ராபியாபானு, 12. வார்டு வேட்பாளராக M.சூர்யபாரதி, 35 வார்டு வேட்பாளராக கிரிஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் 03.02.2022 அன்று மாலை 3.00 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில், மூன்று வேட்பாளர்களும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகின்றது. மேலும் மாவட்டத்திலுள்ள 156 வார்டுகளில் ஒரு வார்டு கூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள மூன்று வார்டுகளிலும் திராவிட முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்பவரும் திமுக வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.