காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. இவர் அங்கு உள்ள தனியார் பட்டுசேலை கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். ரேணுகாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தனர். ரேணுகாவிற்கு தொடர்ந்து மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவை இருந்து வந்துள்ளது இதனால் ரேணுகா இரவில் தூங்க முடியாமலும் உடல் வலியால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார் .




இந்நிலையில் மேலும் உடல் நிலை மோசமானதால் நேற்று மருத்துமனைக்கு சென்றுவிட்டு வந்தனர். பின்பு  கணவரும், பெரிய மகளும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது உடல் வலியை தாங்க முடியாமல் ரேணுகா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த இரண்டாவது மகள்  புவனாவும் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.


பின்னர், மதிய உணவிற்காக அன்பு வீட்டிற்கு வந்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், அன்பு தனது அண்ணன் மகனான கோபியை ஜன்னல் வழியே பார்க்கும்படி தெரிவித்து உள்ளார். அதன்படி, சிறுவன் ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது தாயும், மகளும் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் தொங்கினர். இதனை கண்டு சிறுவன் அலறவே, அக்கம்பத்தினர் கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது ரேணுகாவும், புவனாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.




தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அன்பு மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேணுகாவின் கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மனைவி ரேணுகாவிற்கு உடல்நிலை கோளாறு இருந்ததாகவும் அதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவர் அன்பு தெரிவித்தார்.




மேலும் உயிரிழந்த மகளும் என் மனைவியும் மிகுந்த பாசத்துடன் பழகி வந்ததாகவும், அதேபோல் ரேணுகாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிந்ததில் இருந்து தன் மகள் சோகமாக இருந்ததாகவும், அடிக்கடி மருத்துவமனைக்கு ரேணுகாவை அழைத்து சென்று சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரேணுகா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதால், என் மகளும் அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். உறவினர்கள் சொல்லும் காரணத்தினால்தான் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என தற்போது சிவகாஞ்சி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாசத்தின் மிகுதியால் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.


ஒரு தலை காதலால் காண்டான தாத்தா... வீட்டை எரித்தார் கெத்தா... போலீஸ் தூக்கியது கொத்தா!