காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் ஊராட்சியில் வசித்து வரும் எ.சிவஞானம் என்பவர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த மண்டபத் தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் இவரது மளிகை கடைக்கு பக்கத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இடம் தொடர்பான பிரச்சனை நிலவி வந்துள்ளது.



இந்நிலையில் நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் அவரது நண்பரான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆபேல் ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திலிருந்த அவரது உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

 

இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் அப்பகுதியில் தேடிச்சென்ற பொழுது முட்புதாரில் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே தாலுகா காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தில் காஞ்சி தாலுகா போலீசார் விரைந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் அவரது நண்பரான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆபேல் ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை ஏற்று அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இது நடத்த உடனடியாக விசாரணை மேற்கொண்டு, கொலை செய்தவர்களை கைது செய்தோம் என தெரிவித்தனர்.

 

மேலும் : காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்பம்.

 

காஞ்சிபுரத்தில் மற்றொரு சம்பவமாக, ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (48). விவசாயத் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பெயர் நாகலட்சுமி (40). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜயகுமார் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் உறவினர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரவணன் – நாகலட்சுமி தம்பதிக்கு சமீபகாலமாக கடன் தொல்லை கூடுதலாக ஏற்பட்டது. இதனால், குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினையும் நடைபெற்று வந்துள்ளது. இதில், மன உளைச்சல் ஏற்பட்ட சரவணன் தன்னுடைய மனைவிக்கும், மூத்த மகன் விஜயகுமாருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

 

இவர்கள் மூவரும் வயல் வெளியில் மயங்கி கிடந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியுற்று, அவர்கள் மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த மூன்று பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. சரவணன் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளதாகவும், சமீபகாலமாக கடன் பிரச்சனையும் குடும்ப பிரச்சனையும் தலைத் தூக்கியதால், இவர்கள் மூன்று பேரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என தெரிய வருகிறது. இவர்களின் தற்கொலை முயற்சியினால் புதுப்பாக்கம் கிராமத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.