ஶ்ரீபெரும்புதூர் அருகே திருமங்கலம் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்து கால்கள் கட்டப்பட்டு கால்வாயில் கண்டெடுப்பட்டுள்ளது.
காணாமல் போன கர்ப்பிணி பெண்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி ( வ/32 ) மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து வருகிறார்.
இந்தநிலையில் தேவி நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று காலை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தார். இந்தநிலையில் நேற்று திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் உள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர்.
கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்
அப்போது கால்வாய் சிலாப்க்கு அடியில் பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஏ.எஸ்.பி., உதயகுமார் தலைமையிலான போலீசார் கால்வாய் சிலாப்க்கு அடியில் சிக்கி கொண்ட சடலத்தை கடப்பாரை கொண்டு சிலப்பை அகற்றி பார்த்தபோது கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்த நிலையில், இருந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், தேவி கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும், கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக இருந்ததால் கொலை என தெரியவந்தது. கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டு சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கர்ப்பிணிப் பெண் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதில் குறிப்பிட்ட நபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
தனிமையில் உல்லாசம் - கர்ப்பம்
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் சந்தேகம் கிளம்பியது அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக்கியது.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். தேவி மற்றும் ரவி ஆகிய இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருடைய நட்பு திருமணம் தாண்டிய உறவாக நீடித்துள்ளது. அவப்பொழுது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் விளைவாக தேவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
தேவி கர்ப்பமானதை அறிந்த ரவி கருவை கலைக்க கூறி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. கருவை கலைக்க மாட்டேன் என தேவி சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று தேவி இந்த குழந்தையை கலைக்க போவதில்லை நான் என் கணவன் குழந்தை என வளர்த்துக் கொள்கிறேன் என சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தனக்கு எதிர்காலத்தில், பிரச்சனை வந்து விடுமோ என பயந்து தேவியை கொலை செய்து, நிர்வாணமாக்கி கால்வாயில் வீசி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவியை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்