இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.
டென்னிஸ் உலகின் ராணி:
இந்திய டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக இருப்பவர் சானியா மிர்சா. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருந்தவர். பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்தனர். அதேநேரம் சோயப் மாலில் பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகையை மூன்றாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது சானியா மிர்சாவுக்கு மனதளவில் சோகத்தை ஏற்படுத்தியதாக சோயப் மாலிக்கின் சகோதரிகள் கூட தெரிவித்து இருந்தனர்.
ஹஜ் புனித பயணம்:
விவாகரத்து பெற்ற பின்னர் சானியா தன்னுடைய குழந்தை உடன் தனியாச வசித்து வருகிறார். இச்சூழலில் தான் சானியா மிர்சா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில்,” என்னை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்ல நான் ஆசைப்படுகிறேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன்.
இந்தத் தருணத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் உங்கள் மனது பாதிக்கும்படி ஏதேனும் செய்திருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தை நான் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு என் இதயம் நன்றி உணர்வுடன் இருக்கின்றது.
என்னுடைய பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் செவி சாய்த்து என்னை ஆசிர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்த வேண்டுகின்றேன். இந்தப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன்.
என் வாழ்க்கையின் மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்ளும் இந்த தருணத்தில், எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த பயணத்திலிருந்து திரும்பி வருவதன் மூலம் சிறந்த மனிதராகவும் இறை மீதான நம்பிக்கை அதிகரித்வராகவும் திரும்புவேன் என்று நம்பிக்கை கொள்கின்றேன்” என்று சானிய மிர்சா கூறியுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?
மேலும் படிக்க: IND vs PAK: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மிரட்டலால் அச்சம்..! நடைபெறுமா இந்தியா - பாகிஸ்தான் போட்டி..?