சில சமயங்களில் பெரிய பெரிய விபத்துக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவர் உண்டு. இதற்கு நேர்மாறாக எதிர்பாராத நடைபெற்ற சிறிய விபத்தில் உயிரிழந்தவர்கள் உண்டு, அந்தவகையில் லாரியிலிருந்து கழிந்து ஓடிய டயர் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு மீது மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழே படப்பை பகுதியை சேர்ந்தவர் முரளி (45). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதியன்று படப்பை பஜாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். 



 

அப்போது முரளியின் பின்னால் வந்த கனரக லாரியின் பின்பக்க டயர் கழன்று ஓடி வந்து முரளியின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் முரளியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 





அங்கு அவருக்கு 4 தினங்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும் தொடர்பு கொண்டு கேட்டபோது தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைக்கு பின்பு மகிழும் விவரம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Ilaiyaraja Controversies: 80-வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா! இதுவரை கடந்துவந்த சர்ச்சைகள்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


சென்னை : நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி.. ஓடிவந்த போக்குவரத்து காவலர்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண