கோயில் அருகே கிடந்த தலை.. அலைந்து திரிந்த போலீஸ்...இளைஞர்களுக்கு மாவு கட்டு, அதிர்ச்சி வாக்குமூலம்..!
கோயில் அருகே கிடந்த தலை.. அலைந்து திரிந்த போலீஸ்...இளைஞர்களுக்கு மாவு கட்டு, அதிர்ச்சி வாக்குமூலம்..!
கிஷோர் Updated at:
11 Sep 2023 01:11 PM (IST)
போலீசார் பிடிக்கச் சென்றபோது தப்பி ஓட முயன்று தவறி விழுந்து கை கால்கள் உடைந்த இரு இளைஞர்களுக்கு கட்டு போட்டு 5 பேரையும் சிறையில் அடைத்த வாலாஜாபாத் போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜித் (வயது 25). அஜித் கூடா நட்பின் காரணமாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வாலிபர் அஜித்தை மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு காரில் கடத்திச் சென்று முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் கிராம் ரயில்வே பாதை அருகே வைத்து தலை வேறு முண்டம் வேறு, வெட்டி கொலை செய்துள்ளனர்.
பின்னர் எந்தவிதமான அச்சமும் இன்றி அஜித்தின் தலையை தாங்கி கிராமத்தில் உள்ள கோயில் அருகே வீசிவிட்டு சென்று உள்ளனர். காலை நேரத்தில் அப்படியே சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தின் தலையும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் அருகே கிடந்த தலை..! உடலை தேடி அலைந்த போலீஸ்..! காஞ்சியில் நடந்த கொடூர கொலை பின்னணி
கொலை செய்யப்பட்ட வாலிபர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதையில், ஏகனாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் புகுந்து ரகளை செய்த நிலையில் போலீசார் கைது செய்தனர், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை வழக்கு ஒன்று குறித்து துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது. வாலிபர் அஜித் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் . மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் ஒரு காரில் இருந்தவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்து விசாரித்ததில், அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரில் இருந்த காஞ்சிபுரம் திம்மராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன்( 22), விக்னேஷ் ஆகிய இருவரை கைது செய்து காஞ்சிபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கோவில் அருகே கிடந்த தலை..! உடலை தேடி அலைந்த போலீஸ்..! காஞ்சியில் நடந்த கொடூர கொலை பின்னணி
முன்னதாக, விக்கிரவாண்டி அருகே போலீசாரைக் கண்டு தப்பி ஓடிய போது விக்னேஷுக்கும் குமரனுக்கும் கை, கால்கள் உடைந்த நிலையில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கை கால்கள் உடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து மாவு கட்டு போட்ட போலீசார், பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பூசிவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஆதித்யா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை மறைவிடத்தில் இருந்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித், நண்பர்களான இவர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், அவர்களின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு திருப்பித் தராமல் அடிக்கடி தகராறு செய்வதும், தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதுமாக இருந்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் சேர்ந்து அஜித்தை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.