காஞ்சிபுரம் அடுத்துள்ள வையாறு ஊர் பகுதியில் தாயை மனவளர்ச்சி குன்றிய மகன் கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் நீலா தம்பதியினர். இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும், இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தாய் நிலா உறங்கிக் கொண்டிருந்த நிலையில் மனவளர்ச்சிக்கு குன்றிய பேரருளாளன் வீட்டிலிருந்த அம்மி கல்லை தூக்கி தாய் தலை மீது போட்டு சென்றுவிட்டார். இதில் தாய் நீலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த நீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தாய் மீது கல்லை போட்டுவிட்டு சென்ற பேரருளாளனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, அப்பகுதி மக்களிடம் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது, கொலை செய்ததாக கருதப்படும் மகன் மனம் நலம் பாதிப்பு இருந்தது விசாரணையில் தெரிய வருகிறது. இதுகுறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், மேலும் மற்ற உறவினர்களிடமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதனைத் தொடர்ந்து சட்டத்தின் அடிப்படையில், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அவற்றை மேற்கொள்வோம் என தெரிவித்தனர் .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்