உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தினம் தோறும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அப்பகுதியில் அதிகளவு கடைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில், வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்டு கை குழந்தை வைத்துள்ளார். இவர் தனியாக வசித்து வருகிறார். நீண்ட காலமாக அப்பகுதியில் சித்ரா கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி, அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் திலகவதி வளையல் கடை நடத்திவரும் சித்ராவிடம் கடை நடத்த வேண்டும் என்றால் குறிப்பிட்ட பணத்தை தனக்கு தர வேண்டும் என அடாவடி செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் வளையல் கடை நடத்த வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமூலாக தரவேண்டும். குறிப்பிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தரவில்லை என்றால் கடையை அகற்றுமாறு திலகவதி எச்சரித்துள்ளார்.


 




இருந்தும் பல முறை மாமன் கேட்டும் சித்ரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். பணம் கொடுக்காததால் சித்ராவை அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி சித்ராவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது தாக்கியுள்ளார். 


 




 



பாதிக்கப்பட்ட பெண் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி திலகவதியை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாமுல் கேட்டு  கொடுக்காததால் வளையல் கடை பெண்ணை தாக்கியது தொடர்பாக காஞ்சிபுரத்தில்  அதிமுக நிர்வாகி கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக திலகவதி சித்ராவை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் திலகவதியை சித்ரா தாக்கும் காட்சிகள் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


 


 


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண