காஞ்சிபுரம் அவளூர் கிராமத்தில் 2 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், இரு தரப்பும் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அவளூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஆசூர் பகுதியை சேர்ந்த விஷால் (19), சுந்தர் (21) ஆகிய இரண்டு இளைஞர்கள். அவளூர் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும், மாணவி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். கேலியும் கிண்டலமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
பெண்களுடன் இளைஞர்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து, சுந்தர் மற்றும் விஷாலை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வேலி காத்தான் கட்டையால், இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த சம்பவத்தின் போது, அவளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதை மொபைல்போனில், வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் விஷால், சுந்தர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசிகவினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இளைஞர்களை ஊர் கிராம மக்கள் காலில் விழ வைத்துள்ளதாக, விசிக மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புக்கு முன்னணி சார்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
இதனைத்தொடர்ந்து, அவளூர் கிராமத்தை சேர்ந்த 7 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த மாகறல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் போலீசார் கைது செய்து அழைத்து, சென்றிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து, அவளூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பாமகவினர் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, போலீசார் சமாதானம் படுத்தினர். இந்தநிலையில் விசிக சார்பில், இன்று காலை வாலாஜாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்