கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைப்பட்டு அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பாட்டிக்கு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). இவரது மனைவி தொப்பாய் (35). இவர்களுடைய மகன் மதன் (6), மகள் ரக்சனா(3).


இந்த நிலையில் மதியம் மணிவண்ணனின் வீட்டின் முன்பு குளிர்பானம் ஒன்று கிடந்ததாக தெரிகிறது. அதை மணிவண்ணனின் தாய் லட்சுமி எடுத்து குடித்துள்ளார். பின்னர் அந்த குளிர்பானத்தை தனது பேத்தியான ரக்சனாவுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.


குழந்தையை கடத்தும் தம்பதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!


இதையடுத்து அவர்களை உறவினா்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக லட்சுமி சென்னை அரசு மருத்துவமனைக்கும், ரக்சனா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி ரக்சனா பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமிக்கு சென்னையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tenkasi Rowdy Arrest: குளத்திற்குள் பதுங்கிய ரவுடி..டிரோன் மூலம் தட்டித்தூக்கிய போலீஸ்! பரபரப்பு காட்சிகள்


இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் முன்பு இருந்தது காலாவதியான குளிர்பானமா? அல்லது விஷம் கலந்த குளிர்பானமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் - 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி 2022-ல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட ஆய்வின்போது. 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டது. ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 இலட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Neeravi Murugan Encounter: திமுக பிரமுகர் கொலை... தேடிய குஜராத் போலீஸ்! யார் இந்த நீராவி முருகன்