கள்ளக்குறிச்சி அருகே S.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கினார். இதையடுத்து அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய சுப்பிரமணி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

Continues below advertisement

10 ஆயிரம் தந்தால் தான் பட்டா மாற்றம்

இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு என்பவர், பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்று சுப்பிரமணி மற்றும் அவருடைய மகன் மணியிடம் கூறியுள்ளார். அதற்கு சுப்பிரமணி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.10 ஆயிரம் தந்தால் தான் பட்டா மாற்றம் செய்து தரமுடியும் என பாலு கூறியுள்ளார்.

Continues below advertisement

மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை :

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணி இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின் படி ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மணி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் பணத்தை கொடுத்தார்.

கையும் களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்:

அதை அவர் வாங்கிய போது,  தீடீர் அலுவலகத்தின் உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர் அருள்ராஜ் மற்றும் போலீசார் கையும் களவுமாக சிக்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவை பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chandrayaan 3 Facts: விண்ணில் சீறப்போகும் சந்திரயான் - 3..! சந்திரயான் 2-லிருந்து எப்படி எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண