ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழு மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை விசாரணையில், மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது மனைவி தராததால் கணவர் கொன்றுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.


இந்நிலையில் திலேஷ்வர் கஞ்சு என்ற கொலை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 14ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பெங்களூருவிலும் இதே போன்று மனைவியை சந்தேகத்தின் பெயரால் கொலை செய்துள்ளார் ஒருவர்


மதுவாங்க பணம் தராத மனைவி கழுத்தை நெரித்துக்கொலை… குடி அடிமை கணவரின் கோரச்செயல்..


கொலை செய்த திலேஷ்வருக்கும் பிரியா தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஹசாரிபாக் குடியிருப்பில் வசிக்கும் பிரியாவின் சகோதரர் நரேஷ் கஞ்சு கூறுகையில், திலேஷ்வர் தொடர்ந்து மது அருந்திவிட்டு பிரியாவை அடித்து வந்ததாகவும், மதுவுக்கு அடிமையான திலேஷ்வர், மது வாங்குவதற்காக வீட்டு உபயோகப் பொருட்களை விற்றதாகவும் கூறியுள்ளார். தகவல் கிடைத்ததும், போலீசார், குற்றம் நடந்த இடத்திற்கு வந்து, இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்ரா சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில், சம்பவத்தன்று மது வாங்குவதற்காக பணம் கேட்ட திலேஷ்வருக்கு ப்ரியா பணம் கொடுக்க மறுத்ததாகவும், வாக்குவாதம் முற்றியதால் அதைத் தொடர்ந்து அவர் ப்ரியாவைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரியவந்தது.


32 வயது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தீ வைத்து எரித்துக்கொன்ற சிறுவன் - டெல்லியில் அதிர்ச்சி!



குற்றத்தை செய்துவிட்டு தப்பியோடிய திலேஷ்வரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். அவர் மீது உரிய விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 40 வயது நபர் தனது 32 வயது மனைவியை சந்தேகத்தின் பேரில் கத்தியால் குத்திக் கொன்றதாக கூறப்படும் சில வாரங்களுக்குப் பிறகு இதே போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட்டில் நிகழ்ந்துள்ளது. காந்தராஜு என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அவரது மனைவி ரூபா, தனது ஆண் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருடன் தகாத உறவுவைக் கொண்டிருப்பதாக சந்தேகமடைந்த நிலையில், ஒருநாள் இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரத்தில் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.