சமூக வலைதளங்களை சிலர் தவறான நோக்குடன் பயன்படுத்துவது சமுதாயத்தில் அச்சமூட்டுகிறது. இந்த பிரச்னையில் குழந்தை நிர்வாண படங்களை வெளியிடுவதும், அதை விற்பனை செய்யப்படுவதும் சமீப காலங்களில் அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


புகார் கொடுக்க தயங்கும் பெற்றோர்கள்:


இந்நிலையில் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலில் வன்கொடுமை குறித்து டீகோட் நிறுவனமானது ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள்து. அந்தன் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவமானது, 16 வயது சிறுமி, அவரது 17 வயது ஆண் நண்பர் கட்டாயத்தையடுத்து, நிர்வாண வீடியோவை அனுப்பியிருக்கிறார். சில நிமிடங்களில், அது அவர்களின் வகுப்பில் உள்ள பல சிறுவர்களின் தொலைபேசிகளை அடைந்துள்ளது. இதையறிந்த அவரது பெற்றோர், சிறுவனின் பெற்றோரை சந்தித்து, வீடியோவை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  


குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து நிபுணத்துவம் பெற்ற ஸ்பேஸ் 2 க்ரோவின் நிறுவனர். சித்ரா ஐயர் கூறுகையில், "அவர் வீடியோவை நீக்கியிருந்தாலும், அது இணையத்தில் உள்ளது. ஐயர் மற்றொரு அரசு சாரா நிறுவனத்துடன் (NGO) ரதி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டோம், இது ஆன்லைன் தளங்களில் இருந்து குழந்தை பாலியல் ரீதியாக துஷ்பிரயோக செய்திகளை (CSAM) அகற்றுவதில் வேலை செய்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வழி கண்டுபிடித்த நேரத்தில், பெற்றோர் பின்வாங்கிவிட்டனர். அவர்கள் மேலும் துன்புறுத்தலை எதிர்கொள்ள விரும்பவில்லை"  என்று தெரிவிக்கிறார்.


அமெரிக்க இலாப நோக்கற்ற நிறுவனம் ( NGO ) குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC), காணாமல் போன மற்றும் துண்புறத்தப்பட்ட குழந்தைகள் குறித்து 2019 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது இணையத்தில் பதிவேற்றப்பட்ட ஆன்லைன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களின் (CSAM) எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது.


உலகளவில் இந்தியாவில் அதிகம்:


அதில் 1,987,430 உள்ளடக்கங்கள் இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளன, இது உலகிலேயே மிக அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் கடுமையான தண்டனைகள் இருந்தபோதிலும், சமூக ஊடக தளங்களில் குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் நிறைந்துள்ளது.


இந்திய குழந்தைகளின் பாலியல் படங்களை வெளியிடும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பார்வையாளர்களை டெலிகிராம் சேனல்களுக்கு அழைத்துச் செல்கின்றன, அங்கு மக்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை ரூ 40 முதல் ரூ 5,000 வரை எங்கும் விற்கிறார்கள் என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கிறது., 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரலில், டெலிகிராமில் சிறார் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 29 வயது இளைஞருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் யூபிஐ மூலம் பயனர்களிடமிருந்து பணம் சேகரித்தவர். இந்த வியாபாரத்தில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத் கே, பாதிக்கப்பட்ட எந்த குழந்தையும் புகார் செய்ய முன்வரவில்லை என்று டிகோட்டிடம் தெரிவித்துள்ளார். "கற்பழிப்பு மற்றும் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூட ஜாமீன் கிடைக்கும், இது அவரை மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறையில் தள்ளும் குற்றம். எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நினைத்தார்," என்று வழக்கறிஞர் கூறினார். அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராமில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை விற்கும் வணிகம் பரவலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்


இந்நிலையில், இந்த குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க பலர் தயங்குவாதலும் வழக்கு பதிவு செய்வதிலும் சிக்கல் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சமூக வலைதள நிறுவனங்களுக்கு புகார்:


 இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களை நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து மெட்டா, டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும் , இதுகுறித்து சமூக வலைதள நிறுவனங்கள் ஏதேனும் நடவடிக்கை தெரிவித்தால், அது சரியானதாக இருக்கும் எனவும் டீகோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.