கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  நண்பர்கள் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


 




கரூரில் கடந்த மே மாதம் 26- தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து 8 நாட்கள் சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, வருமானவரித்துறை அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்காத இடங்களில் சீல் வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமலாக்குத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த மாதம் இரண்டாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள்  10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.


 


 




 


தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் குறிவைத்து சோதனை தொடங்கியுள்ளார்.


இன்று நடைபெறும் சோதனையானது, ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீடு, 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய வீட்டின் இடத்தில் முன்னாள் உரிமையாளர் என்று கூறப்படும் சின்னாண்டான் கோவில் பகுதியில் உள்ள ராம விலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் பாபு அலுவலகம், கரூர்-கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவரின் உரிமையாளரின் சக்தி மெஸ் உணவகம், மேலும் 2 நிதி நிறுவனம் என 5 இடங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


 




 


சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு அதிகாரிகளால் சோதனை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து கடந்த முறை நடைபெற்ற சோதனையின் போது கரூரில் சீல் வைத்து சென்ற இடங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண