குன்றத்தூர் அடுத்துள்ள துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா (40), ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயது மகளும், என்ற மகளும், நவீன்(8), என்ற மகனும் உள்ளனர். மகள் கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.




இதனையடுத்து இரவு நவீன் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.




இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சென்ற போலீசார் இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அங்கு வசிக்கும் வாலிபருடன் பேசி வருவதாக மாணவி அங்கிருந்தவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது . இதனால் அந்த வாலிபரின் பெற்றோர் மாணவியை கண்டித்து அவரது பெற்றோர் வந்தால் தெரிவிப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.




இதனால் அச்சமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மேலும் தன்னை அந்த வீட்டில், இருந்த அக்கா திட்டியதாகவும் அவரது நோட்டில் எழுதி இருப்பதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




இதுக்குறித்து அவரது தாய் வசந்தி கூறுகையில், மேல் வீட்டில் வசிக்கும் செல்வி என்ற பெண் தனது மகளை திட்டியதாகவும் அதன் காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மகளின் சாவில் உள்ள சந்தேகத்தை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .