காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சேர்ந்த தீன தயாளன் மற்றும் பாரதி பிரியா ஆகிய இருவருக்கும் , பெற்றோர்கள் ஏற்பாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. தற்பொழுது இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன் குழந்தை பிறக்கவில்லை என சந்தேகம் கிளப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருதரப்பிலும் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சனை கேட்டு கொடுமை செய்துதாக மனைவி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை விசாரணை
இந்தநிலையில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்த புகார் மனு, காஞ்சிபுரம் சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்தநிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அமைந்துள்ள சமூக நல்ல அலுவலகத்தில் இருதரப்பிலும் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து வெளிவந்த இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தீனதயாளன் மீது பெண் வீட்டார் செருப்பால் அடித்து தாக்குதல் நடத்தியதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு உள்ளே இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட தற்பொழுது வெளியாகி உள்ளது. குடும்ப பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளாமல் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்ட சம்பவம் அங்கிருந்து மக்களிடையே முகம் சுழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை சொல்வது என்ன ?
இச்சம்பவம் காவல்துறையினர்கள் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, இரு தரப்பிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள் புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் சமூக நலத்துறை மூலம் தீர்வு காணப்படுவதும் வழக்கமான நடைமுறைதான். இரு தரப்பினரும் தற்பொழுது தாக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் குறித்து , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.