விழுப்புரம் அருகே வி.கொளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி, ஓம்சக்தி, கெங்கையம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த கோயில்களில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோயில்களை பூட்டிவிட்டு அதன் பூசாரி, வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை 3 கோயில்களின் கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், இதுபற்றி கோயில் நிர்வாகிகளுக்கும், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


Crime: 22 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?




இதையடுத்து கோயில் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்து அந்த 3 கோயில்களுக்குள்ளும் சென்று பார்த்தனர். அப்போது 3 கோயில்களிலும் இருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததும் மேலும் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சாமிகள் மற்றும் முருகப்பெருமான் சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தலா ஒரு கிராம் பொட்டு தாலியும், அதே போல் கெங்கையம்மன், ஓம்சக்தி ஆகிய சாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தலா ஒரு கிராம் பொட்டு தாலி என 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.




Watch Video: ‛சார்... ஜெயில் வந்திருச்சு...’ எழுப்பிய போலீஸ்... அசந்து உறங்கிய ராஜேந்திரபாலாஜி... சிறை வாசலில் திக் திக் திக்!


இதனிடையே தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கோயில்களில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 3 கோயில்களின் உண்டியலிலும் ரூ.3 ஆயிரம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோயில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் மற்றும் சாமி சிலைகளின் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண