சென்னையிலுள்ள 40  வயது நபர் ஒருவர் போலி சப்-இன்ஸ்பெக்டராக நடித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு அருகே ஒரு கடிகார கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நபர் காவலர் சீருடையில் வந்துள்ளார். 


அவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கடிகாரங்களை அவர் வாங்கியுள்ளார். அப்போது இதற்கான கட்டணத்தை கடைக்காரர் கேட்டபோது தன்னுடன் ஒரு நபரை அனுப்பி வைத்தால் அவரிடம் பணம் தருவதாக சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்தவர் தெரிவித்துள்ளார். இதை நம்பி கடிகார கடைக்காரர் ஊழியர் ஒருவரை அந்த நபருடன் அனுப்பி வைத்துள்ளார். 




தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு சிறிது தூரம் ஒரு சாலையில் சென்ற அந்த நபர் பின்னர் கடை ஊழியரை விட்டு தப்பியுள்ளார். அவரை பல இடங்களில் கடை ஊழியர் தேடியுள்ளார். எனினும் அந்த நபரை அவரால் கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் கடிகாரம் வாங்கிவிட்டு தப்பிய நபர் தொடர்பான தகவல் கிடைத்தது. அதன்படி 40 வயதான சிவா என்ற நபர் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 


அந்த நபரை உடனடியாக காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர். அவர் ஜோஸ்வா என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் போல் சீருடை அணிந்து பல இடங்களில் மோசடி செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் மீது வடபழனி உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் இவர் மீது மோசடி வழக்குகள் இருப்பதை காவல்துறையினர் அறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இவர் மீது தற்போது மீண்டும் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்குடன் சேர்த்து மற்ற  காவல்நிலையங்களில் இருக்கும் வழக்குகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு