தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் செல்வகுமார் (52). விவசாயியான இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் (21) என்ற ஆண் மகனும், பவித்ரா (25). தமிழ்மணி (22) என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகி, கணவரோடு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரம்பக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான தில்லங்காடுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கரம்பக்காடு சுடுகாடு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக பயங்கரமான ஆயுதங்களால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா மற்றும் போலீஸார், செல்வக்குமாரின், சடலத்தை மீட்டு, ஆம்புலன்சில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சேதுபாவசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,
கணவரை பிரிந்து வாழும் சுதா என்பவருன் கொல்லப்பட்ட செல்வக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடனும் சுதா கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், ராமலிங்கத்தின் மனைவி சுபாஷினி (32) கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சுபாஷினிக்கும் செல்வக்குமாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், சுபாஷினியின் உடலில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பது குறித்தெல்லாம் செல்வக்குமார் என்னிடம் கூறியுள்ளதாக சுதா, ராமலிங்கத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம் கறம்பக்காடு சுடுகாடு அருகே நேற்று இரவு மறைந்திருந்து மோட்டார் சைக்கிளில் வந்த செல்வகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக ராமலிங்கம், சுதா ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்