நாமக்கல் : மருத்துவர் பரிந்துரையின்றி கருவை கலைக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்..

வீட்டின் அருகில் உள்ள மருத்துவம் மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.

Continues below advertisement

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசம் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரம்யா (29) கர்ப்பமாக இருந்துள்ளார். ரம்யா திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Continues below advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரம்யா ஓரிரு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி பெண் திடீர் மரணம் அடைந்ததை கேட்டறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ரம்யா உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உண்மை காரணத்தை கண்டறிய உத்தரவிட்டார். இதையடுத்து குடும்பநலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் வளர்மதி தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , காவல்துறை, வருவாய் துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு குழுவினர் விசாரணையில் உயிரினது கர்ப்பிணி ரம்யா, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனது வீட்டின் அருகில் உள்ள மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்துக் கடைக்கு ஆய்வு செய்ய சிறப்பு குழு அதிகாரிகள் சென்றனர். ஆனால் மருந்து கடை பூட்டி இருந்துள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தான் சிறப்புக் குழுவினர் மருந்துக்கடையின் உரிமையாளர் வராததால் கடந்த 31-ஆம் தேதி மருந்தகத்தில் தீவைத்தனர். இதனைத் தொடர்ந்து மருந்து கடையின் உரிமையாளர் முத்துசாமியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் இதுகுறித்த அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தேவையற்ற மற்றும் வேண்டாத  கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழு வாரங்களுக்குள் உட்பட்ட கர்ப்பங்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக மற்றும் இலவசமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு தங்கள் பகுதிகளில் உள்ள கிராம சுகாதார நிலைய மருத்துவர்கள் அல்லது செவிலியர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. எனவும் மருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola