மைனர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அசாமைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. வழக்கு பதியப்பட்டவரின் பராமரிப்பில் இருந்த சிறுமி தனது பாதுகாவலராக இருந்தவர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். 


இதையடுத்து இதனை விசாரித்த அசாம் போலீஸ் மாவட்ட சட்ட சேவை அதிகாரி வழியாக கடந்த டிசம்பர் 17ல் புகார் எழுப்பியிருந்தது. இதையடுத்து தலைமை மாஜிஸ்திரேட்டின் புகாரின்படி குற்றம்சாட்டப்பட்டவர் மீது தற்போது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த தகவல்கள் பாதுகாப்பு கருதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 



தன் மீது எஃப் ஐ ஆர் பதிவுசெய்யப்பட்டிருந்த சூழலில் குற்றம்சாட்டப்பட்டவர் கைதைத் தவிர்க்க முன் ஜாமீன் பெற நீதிமன்றத்தை அனுகியிருந்தார். இந்த நிலையில் முன் ஜாமினும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






சிறுமியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை மற்றும் பரிசோதனையில் அவரது புகார் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து குற்றவாளி கௌஹாட்டி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில் அவருக்குத் தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


குற்றம்சாட்டபட்டவர் தன் புகழுக்குக் கலங்கம் ஏற்படுத்தவே இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.






அறிவியல் துறையில் விவசாயம் தொடர்பாகக் கள அளவில் பல புதிய மெஷின்களைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு 2019ல் பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.