இளைஞர்களிடம் ஸ்விக்கி மூலம் போதைப்பொருள்கள் விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் பெங்களுருவில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இன்றைய சூழலில் ஸ்விக்கி ஆப் பயன்படுத்தாத நபரே இல்லை என்று தான் கூற வேண்டும். காலை காபியிலிருந்து இரவு டிப்பன் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தளவிற்கு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தது ஸ்விக்கி. அதனைப்பயன்படுத்திக் கொண்டு தான் தற்போது ஸ்விக்கி மூலம் போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக பெங்களுரை தலைமையிடமாக்கொண்டு செயல்படும் வரும் நிலையில், அதேப்போன்று போலி உடை மற்றும் பைகளுடன் போதைப்பொருள்களை விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி எவ்வழியில் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டது? என்னென்ன வழிமுறைகளைப்பின்பற்றினார்கள் என தெரியுமா?




தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பிட்காயின் மூலம் டார்க் இணையத்தில் போதைப்பொருள்களை வாங்கி அதை ஸ்விக்கி என்ற பெயரில் வீடு வீடாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து போலீசார் நடத்திய சோதனையில், ஜார்க்கண்டை சேர்ந்த ரவி, ரபி பிரகாஷ் ஆகிய இரண்டு பேரை கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி சி.சி.பி., என்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள், டார்க் நெட் என்ற இணையத்தில் பிட் காயின் மூலம் வெளிநாட்டில் இருந்து வாங்கிறார்கள். அவர்களிடமிருந்து பெங்களுர் போன்ற மற்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் பிட்காயின் மூலமாகவே போதைப்பொருள்களை வரவழைப்பார்கள். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக  புத்தகத்தின் நடுவில் ஓட்டை போட்டு, அதன் உள்ளே வைத்து தபால் மூலமாக பெங்களூரு வருமாம். ஆனால் சாதtரண மக்கள் பெயரில் இதனை அனுப்பி வைக்காமல்  அட்வகேட் ஜெனரல் ஒருவரின் பெயரிலும், டாக்டரின் பெயரிலும் ஸ்பீடு போஸ்டில் வரவழைத்து பெற்று கொள்வார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து  யாருக்கு தேவையோ? அவர்களுக்கு கிப்ட் பாக்ஸில் வைத்து ஸ்விக்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வார்கள் என தெரியவந்துள்ளது. குறிப்பாக ஸ்விக்கி உடை அணிந்திருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதனால் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இந்த முறையைப்பயன்படுத்தியுள்ளனர்.



இதனையடுத்து நகர் முழுவதும் போதைப்பொருள் விற்பனைக்காக சில செயலிகளைப்பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆர்டர்களைப்பெற்று இளைஞர்களிடம் படுஜோராக விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதோடு போதைப்பொருள்களை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய கிப்ட் பாக்ஸ்கள், பேக்கிங் கவர்கள், ஸ்விக்கி கம்பெனி டி-ஷர்ட்கள் என அனைத்தும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு போதைப்பொருள்களை நூதன முறையில் விற்பனை செய்தவர்களை கண்டுபிடித்த போலீசாரை உயர்அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.