மைத்துனன் மீது கொண்ட காதலால் மனைவியே , கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் பகுதியில் கார் ஓட்டுரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் ராக்யா நாயக் . இவருக்கு வயது 28. இவரது மனைவி ரோஜா. ரோஜாவுக்கு அவரது மைத்துனர் சபவத் லக்பதி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதற்கு கணவன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மனைவி , காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார். சம்பவத்தன்று ரோஜாவின் காதலர் சபவத் லக்பதி , கணவர் ராக்யாவை மொபைலில் தொடர்புக்கொண்டு , வங்கி பணத்தை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார். நல்கொண்டாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாரு கூறியிருக்கிறார். உடனே சிவா என்னும் நபர் தானும் வருகிறேன் எனக் கூறி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி  ராக்யாவுடன் உடன் சென்றிருக்கிறார். காரில் செல்லும் வழியில் சிவா , நாக்யாவிற்கு பாதாம் பாலை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 




பின்னர் லக்பதியும் சிவனும் மயக்க நிலையில் இருந்த கார் ஓட்டுநர் ராக்யா நாயக்கை நாகார்ஜுனாசாகரில் உள்ள கிருஷ்ணா நதிக்கரை பக்கம் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு வழக்கின் நான்காவது குற்றவாளியான மான் சிங் படகுடன் அவர்களுக்காகக் காத்திருக்க,மயக்க நிலையில் இருந்த  ராக்யா நாயக்கை ஆற்றின் மைய பகுதிக்கு அழைத்து செல்ல உதவியிருக்கிறார்.கரையில் இருந்து 10 கிமீ பயணம் செய்த பிறகு நாயக்கை மீன் பிடி வலையில் சுற்றிய குற்றவாளிகள் , அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடலில் கல்லை கட்டி , ஆற்றில் இறக்கிவிட்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.




இதற்கிடையில் மனைவி ராய்துர்கம் போலீசாரிடம் தனது கணவர் காணமால் போய்விட்டதாக , அதே ஆகஸ்ட் 24 ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த நாளில்தான் ராக்யா நாயக்கை  திட்டமிட்டு கொலை செய்திருக்கின்றனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் , நாயக்கின் மனைவியும் இந்த கொலையில் உடந்தை என்பது தெரியவந்துள்ளது. கணவனை கொலை செய்ய திட்டம் போட்டுக்கொடுத்துவிட்டு , காவல்துறையினரிடம் கணவன் காணாமல் போய்விட்டார் என பாசாங்கு செய்திருக்கிறார். உடனடியாக மனைவி ரோஜா , அவரது காதலன் லக்பதி , சிவன் மற்றும் படகை ஓட்டிச்சென்ற மான் சிங் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்த்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான பாலாஜி என்பவரை சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.