தெலுங்கானா ஹைதராபாத்தில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது திடீரென நடந்த குற்றமில்லை என்றும் பக்காவாக ப்ளான் செய்யப்பட்ட ஒரு சம்பவம் என்றும் தற்போது போலீசார் குறிப்பிட்டுள்ளனர். குற்றவாளிகள் முன்னதாகவே ஆணுறை வாங்கி வைத்திருந்ததாகவும், எனவே இது திட்டமிடப்பட்ட குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், குற்றவாளிகள் ஏற்கெனவே ஆணுறை வாங்கி தயார் நிலையில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றம். அவர்கள் ஆணுறை வாங்கியது எங்கே என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார். மேலும் குற்றம்சாட்ட 5 பேரின் செல்போன் அழைப்புகளையும், செல்போனில் பேசியவர்களின் விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேற்படி விசாரணைக்கு இது உதவுமென தெரிகிறது.




முன்னதாக, கடந்த மே 28 ம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 மற்றும் 323 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் 10 வது பிரிவு 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் சிறுவர்கள்.ஒருவர் இளைஞர் ஆவார். 


அப்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தன் வீட்டில் கூறாமலும், சிறுவர்கள் தன்னை அவமானப் படுத்தியதாக மட்டுமே கூறிய நிலையில், இது குறித்து வழக்கு பதியப்பட்டது. ஆனால், தொடர்ந்து சிறுமியின் உடலில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் தன்னிடம் சில சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில், தன்னை மருத்துவ பரிசோதனை செய்த பெண் ஊழியரிடம் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உண்மையை சிறுமி கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண