ஹைதராபாத்தில் ஐஸ்கிரீமில் மதுவை கலந்து விற்பனை செய்வதாக முகநூலில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஐஸ்கிரீமில் மது:


தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சாலையில் அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 


இச்சோதனையில் 100 பைபர்ஸ் விஸ்கி அடங்கிய 11.5 கிலோ ஐஸ்கிரீமானது பறிமுதல் செய்யப்பட்டது.


அங்கு ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அளவில் மதுவை ( விஸ்கி ) கலந்து அதிக விலைக்கு மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 


இச்சம்பவம் குறித்து கலால் துறையின் கூற்றுப்படி, அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஃபேஸ்புக்கில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கலால் கண்காணிப்பாளர் பிரதீப் ராவ், மதுபானம் கலந்த பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை  செய்வதை உறுதிப்படுத்தினார்.






வழக்குப்பதிவு:


மேலும் கலால் சட்டம் பிரிவு 34A-ன் கீழ் கடுமையான குற்றம் எனவும் தெரிவித்தார்.  இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராவ் தெரிவித்திருக்கிறார். விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கடையை கட்டு சரத் சந்திர ரெட்டி என்பவர் நடத்தி வருகிறார்.



ஷரத் ரெட்டி காட்டு நேரடியாக வீட்டுக்கு பால் விநியோகம் பிராண்டான கியாரோவின் உரிமையாளர் எனவும் தெரியவந்துள்ளது. ஆண்டிபயாடிக் இல்லாத தயிர், பனீர், பால் மற்றும் கிரேக்க தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் உள்நாட்டு பிராண்டாக இந்த பிராண்ட் உள்ளது என கூறப்படுகிறது.


இந்நிலையில், வியாபார நோக்கத்திற்காக மது கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்தது, அதை குழந்தைகள் சிலர் வாங்கி அருந்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?