மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டை போட்டு வந்ததால் கணவர் கண் எதிரே மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வதை செல்போனில் வீடியோ எடுத்து கணவர் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு நகரைச் சேர்ந்த பெஞ்சலையாவுக்கும் அனந்தசாகரம் மண்டலம்  கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொண்டம்மாவுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா  ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராக பணிபுரிகிறார்.  கொண்டம்மா ( நகராட்சி பகுதியில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ) மெப்மா திட்டத்தில் பணி புரிந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த  நிலையில்  மனைவி கொண்டம்மா மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது பெஞ்சலைய்யா சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், கொண்டம்மா மனவேதனையில் இருந்தார். 


'Made In Tamilnadu' உலகம் முழுவதும் ஒலிக்கவேண்டும் - முதல்வர் ஸ்டாலின்


இந்த நிலையில், இன்று  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கொண்டம்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு  தற்கொலை செய்துகொண்டார்.  இதனை தடுக்க வேண்டிய  பெஞ்சலைய்யா அதனை வேடிக்கை பார்த்து கொண்டு தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து மகிழ்ச்சியடைந்தார்.  கணவன் கண் எதிரிலேயே கொண்டம்மா தூக்கில் தொங்கியபடி துடி துடித்து உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் பரவியது. இதனைக்கண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.




நீண்ட நேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை  மேற்கொண்டனர். அப்போது, கணவன் கண்ணெதிரிலேயே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அத்மக்கூறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கணவன் கண் எதிரே மனைவி துக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது நெல்லூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .


Tirupati Darshan: தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே திருப்பதியில் சாமி தரிசன அனுமதி!