வடிவேலு குறித்து வெளியான குற்றச்சாட்டு ஒன்றிற்கு அவருடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். 


சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வர வேண்டும் என்ற நினைப்போடு வாய்ப்பு தேடிய நடிகர் முத்துக்காளை கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடித்த பொன்மனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே முத்துக்காளை பிரபலமானார். 


இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் வரை தீவிர மது குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்த முத்துக்காளை  வடிவேலு கிண்டலாக சொன்னதையும், நடிகர் அல்வா வாசுவின் மரண நிகழ்வும் அந்த பழக்கத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் முத்துக்காளை சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வடிவேலு குறித்து வெளியான குற்றச்சாட்டின் உண்மை என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். 




நிகழ்ச்சியின் நெறியாளர் அவரிடம் வடிவேலு தன் உடன் நடிப்பவர்களை வளர விட மாட்டார். தனக்கு கீழ் தான் அனைவரும் இருக்க வேண்டும் என நினைப்பதாக கூறப்படுகிறதே..இது உண்மையா என கேட்கிறார். அதற்கு முத்துக்காளை வடிவேலு சார் யாரிடமும் நீ பெரிய ஆளாக வரக்கூடாது என சொல்லவில்லை. உடன் நடிப்பவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு முயற்சி பண்ணி போயிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதை மிஸ் பண்றது நாங்கள் தான். அவரு மட்டுமல்ல யாரும் உனக்கு தொழில் தெரிஞ்சிட்டு நீ வெளியே போய் முன்னேறுன்னு சொல்ல மாட்டாங்க. அந்த மாதிரி தான் நானும் தொழில் தெரிஞ்ச அப்பறம் வெளியே போய் முன்னேறி இருக்கணும். 


இப்ப நான் முயற்சி பண்றேன்.இதை அப்பவே நான் பண்ணியிருந்தா வேற ரூட்ல  போயிருப்பேன் என முத்துக்காளை தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலு சார் காமெடி சீன் எழுதும் போது இந்த கேரக்டருக்கு இவரு தான் என முடிவு செய்தே எழுதுவார். அதனால் அவரது குழுவில் இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்களை அவருடன் காமெடி காட்சியில் காண்பது கஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண