புதுச்சேரி திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42).  அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.


திருமணத்தின் போது செந்தில்குமாருக்கு 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக மகேஸ்வரி குடும்பத்தினர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் 50 பவுன் நகை,கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இல்லையென்றால் செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.


Vadalur Vallalar Jothi Dharisanam | ’விலக்கப்பட்ட 7 திரைகள்’ தெரிந்த ஜோதி தரிசனம்!



இந்த நிலையில் 2018ம் ஆண்டு மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  இந்த குழந்தையை பராமரிக்க செந்தில்குமார் தன்னிடம் படித்த முன்னாள் மாணவி ஓருவரை வேலைக்கு அமர்த்தினார்.  அந்த பெண்ணுடன் செந்தில்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகேஸ்வரி அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தினார். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. அதேபோல் அந்த வேலைக்கார பெண்ணும் காணவில்லை. இதற்கிடையே செந்தில்குமாரும், அந்த பெண்ணும் ரகசிய திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.


Zee Tamil Controversy | குழந்தைகளின் காமேடி ஷோ! ஜீ நிறுவனம் 7 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்!


இதனையறிந்த மகேஸ்வரி செந்தில்குமாரின் பெற்றோரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாராயணன்,தாய் வத்திஸ்கா,அண்ணன் ஞானசுந்தரம் ஆகியோர் மீது புகார் அளித்தார்.


இதைதொடர்ந்து போலீசில் புகார் கொடுத்ததால் செந்தில்குமாரின் பெற்றோர்கள் மகேஸ்வரியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி தனது குழந்தை மற்றும் உறவினருடன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னை மிரட்டிய செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.