விழுப்புரம் : மரக்காணம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே விழுப்புரம் வளவனூர் பகுதியில் சேர்ந்த சுப்ரமணி மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு மரக்காணம்  வழியாக வளவனூருக்கு வீடு திரும்பினர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த சுப்ரமணி மற்றும் சுந்தரி ஆகியோர் மீது பேருந்து மோதியது. விபத்தின் சம்பவ இடத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.