திருவண்ணாமலை ( Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளுர் கிராமத்தை சேர்ந்த சக்கராபாணி. இவருடைய மனைவி சிவகாமி வயது (69). இவருடைய கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சக்கரபாணி நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு மகன் ராஜா வயது (39), மகள் உமாமகேஸ்வரி வயது (34), என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் உமாமகேஸ்வரி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். சிவகாமியும், மகன் ராஜாவும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். ராஜா வேலைக்கு எங்கும் சரிவர செல்வதில்லை, இதனால் சொத்தை பிரித்து தரகோரி தாயார் சிவகாமியிடம் சண்டையிட்டுவருவது வழக்கமாக கொண்டுள்ளார். காலையில் சிவகாமி வழக்கம்போல் நூறுநாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சிவகாமி வந்துள்ளார். அப்போது அவரது மகன் ராஜா சொத்து பிரித்து தர வேண்டும் எனக்கூறி வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சிவகாமிக்கும் மகன் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, தாய் சிவகாமியை கட்டையால் தாக்கியும், வாசபடியில் தலையை இடித்து தள்ளிவிட்டு மகன் ராஜா தப்பித்து சென்றுள்ளார்.
சொத்திற்காக தாயை கொலை செய்த மகன்
இதையடுத்து மகன் தாக்கியதில் மயக்கமடைந்த சிவகாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கேளுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். சிவகாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவகாமியின் தலை கதவில் மோதி அதிகளவில் ரத்தம் வெளியேறி சிவகாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தவாசல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தகவலிறந்த வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் கேளுரில் தலைமறைவாக இருந்த மகன் ராஜாவை கைது செய்தனர்.
காவல்துறையினர் விசாரணை
அப்போது, தனது தாய் தவறி விழுந்ததாக கூறி ராஜா நாடகமாடியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜா தனது தாயை அடித்து தள்ளியதால் தான் இறந்தார் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில்வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையிலிருந்து கைரேகை நிபுணர் குழுதுணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் கைரேகை தடயத்தை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே சொத்திற்காக பெற்றதாயை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.