விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த கானை குப்பம் கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு கிருஷ்ணராஜ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி புஷ்பா, இவர் கானை குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு புஷ்பா இறந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணராஜ் தலைவராக இருந்த காலகட்டத்தில் கானை குப்பத்தில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.
இந்தநிலையில், உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவி புஷ்பாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக நீர்த்தேக்க தொட்டியில் புஷ்பாவின் படத்தை வரைந்து, நினைவு நீர்த்தேக்கத் தொட்டி என அதில் குறிப்பிட்டுள்ளார். அரசு சார்பில் அரசு இடத்தில் கட்டப்பட்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நினைவுச்சின்னமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்திருப்பது அப்பகுதியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் கட்டிய உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணி நிறைவடைந்து தற்போது வரை எனக்கு அதற்கான பணத்தை ஊரக வளர்ச்சி துறை வழங்கவில்லை என தெரிவித்தார். என்னுடை பணத்தில் கட்டிய நீர் தேக்க தொட்டியில் எனது மனைவியின் படத்தை வரைந்தேன் என்றார்.
மேலும் இது தொடர்பாக கானை ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவியின்புகைப்படத்தை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும், மேலும் புகைப்படத்தை அழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசு சார்பில் பொது இடத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இச்செயலை அப்பகுதியில் பரபரப்பாகி பேசு பொருளாக மாறி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்