கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்தப்புகாரானது பாஜவின் தலைமைக்கும் புகாராக அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே பாஜக செய்தி தொடர்பாளாரக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜின்டாலும் தொடர்ச்சியாக மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக புகார் எழுந்தது.
தொடர்ந்து நுபுர் சர்மா தெரிவித்த நபிகள் நாயகம் குறித்த கருத்திற்கு எகிப்து, சவூதி அரேபியா, குவைத், ஏமன், கத்தார், யூஏஇ உள்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்தியா சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றார்.
இந்தநிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கர்த்தார் நாட்டை எதிர்க்கும் விதமாகவும் பாஜகவினர் #BoycottQatarAirways ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது, அவர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில் ஒரு சில இதோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்