கரூர் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் அரசு கால்நடை மருத்துவமனைக்குள் உள்ளே புகுந்து மருத்துவர், உதவியாளர், துப்புரவு பணியாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வளையபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.




இந்நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்குள் புகுந்த ராஜ்குமார்,  பெண்களை இழிவாக பேசி இரும்பு கம்பால் தாக்க முயற்சித்துள்ளார்.




மேலும், அந்த அலுவலகத்தில் இருந்த மின்விளக்கு (டியூப் லைட்) எடுத்து பெண் மருத்துவரை தாக்க முயற்சித்தது பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாயனூர் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள முயற்சித்தனர். காவல்துறையிரையும் தாக்க முயற்சித்தால் பரப்பரப்பு ஏற்பட்டது.




கரூரில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.




தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானூர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை பிரதம மருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 




கரூர் மாவட்டத்தில் 6,000 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கரூர் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தெரு நாய்கள் மூலமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை சரி செய்யும் வகையில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.



 


அதேசமயம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் துயர் தடுப்பு சங்கம் இணைந்து தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, விரைவில் அவற்றிற்கான கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.